கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இச்சூழலில் கடந்த வாரம் இந்தப் பொதுத்தேர்வு ஜூன் 1ஆம் தேதியில் தொடங்கி ஜூன் 12ஆம் தேதியில் முடியும் என அரசு அறிவித்தது.
இந்த முடிவை அரசு கைவிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில், மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியுள்ளார். அவர் பதிவில், “லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரின் நலன் கருதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ஒத்திவைக்க வேண்டும்.
இதையும் படிங்க: 'தேதியில் மாற்றங்களே இல்லை; 10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்'