ETV Bharat / state

கல்வி வள்ளல் கே. துளசி வாண்டையார் மறைவு வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

கல்வி வள்ளல் கே.துளசி வாண்டையாரின் மறைவு வருத்தமளிப்பதாக அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
author img

By

Published : May 17, 2021, 12:01 PM IST

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்துவந்த முதுபெரும் காங்கிரஸ் தலைவரான கே.துளசி வாண்டையார் இன்று (மே.17) காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுகவின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கே.துளசி வாண்டையாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,’முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான கே.துளசி வாண்டையார் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.

பழம்பெருமையும்,பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் தான் ஒரு விவசாயி என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம் கொண்டவர்.‘ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திய துளசி அய்யா, அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர்.

தஞ்சை மக்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றியதோடு அரசியல், விவசாயம், கல்வி, சமூகம், இலக்கியம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். அன்னாரது மறைவால் வாடும் அன்புக்குரிய டி.கிருஷ்ணசாமி வாண்டையாருக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பதவியேற்ற சில நாள்களில் கரோனாவால் உயிரிழந்த தலைமை நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.