சென்னை மதுரவாயலில் இயங்கு வரும் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரைக் கண்டித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட் செய்துள்ளார்.
அதில், 'சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித் தலைவி அம்மாவின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் திமுகவினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுகவினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது.
திமுகவினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்` எனக் குறிப்பிட்டுள்ளார்.