ETV Bharat / state

காவிரி நீரைத் திறக்க கோரிக்கை வைக்காதது ஏன்? - முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி

எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கோரிக்கை வைக்காதது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

முதல்வர் காவிரியில் நீரை திறந்துவிடுங்கள் என்று கோரிக்கை வைக்காதது ஏன் என டிடிவி கேள்வி

author img

By

Published : Jul 19, 2023, 1:45 PM IST

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடுங்கள் என்ற கோரிக்கையை வைக்கத் தவறியது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டம் நேற்று (ஜூலை 19) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பெங்களூருவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.

அதில், “எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசிடம் எந்த வித கோரிக்கையும் விடுக்காமல் தமிழ்நாடு திரும்பி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

  • எதிர் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த இரண்டு நாட்களாக பெங்களூருவில் இருந்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டாவில் நெற்பயிர்களை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடகா அரசிடம் எந்தவித கோரிக்கையும் விடுக்காமல் திரும்பியிருப்பது வன்மையாகக்…

    — TTV Dhinakaran (@TTVDhinakaran) July 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தபோதிலும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவின் விருந்தோம்பலில் மகிழ்ந்த திமுக தலைவருக்கு, டெல்டா பாசன விவசாயிகளின் நிலை பற்றி கவலை இல்லையா? டெல்லி சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தந்தால் மட்டுமே கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு வருவேன் என டெல்லி முதலமைச்சர் சொந்த மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுத்ததைப் போல, திமுக தலைவர் குரல் கொடுக்கத் தவறியது ஏன்?

எப்போதுமே தமிழ்நாட்டின் மக்களின் நலனை புறந்தள்ளிவிட்டு சொந்த நலனுக்காகவே சிந்திக்கும் திமுக தலைவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவாரா? பெங்களூரு விமான நிலையத்திற்கே வந்து தன்னை வரவேற்ற துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாரிடம் மரியாதை நிமித்தமாகவாவது காவிரியில் தண்ணீர் திறந்து விடுங்கள் என்று கோரிக்கை வைக்கத் தவறியது ஏன்?

குறுவை சாகுபடி பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று டெல்டா விவசாயிகள் தவிப்பது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கூட்டணி விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பி இருக்கும் திமுக தலைவர், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவது கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது - பொன் ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.