ETV Bharat / state

'குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்னஆனது?'

சென்னை: இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தினகரன்
author img

By

Published : Jun 16, 2019, 8:43 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிதாக ஒதுக்கப்பட்ட நிதியில் வெளிப்படைத்தன்மையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிமராமத்துப் பணிகளுக்காக கடந்த இரண்டாண்டுகளாக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாடு மக்களைத் திசைதிருப்பவே புதிதாக 500 கோடி ஒதுக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள்நடைபெறவிருக்கின்றன என்ற பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்.

அடிப்படைத் தேவையான தண்ணீர் பிரச்னையைக் கூட இவ்வளவு அலட்சியமாக கையாண்டால் மக்கள் இவர்களை நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:குடிமராமத்துப்பணிகளுக்காக கடந்தஇரண்டாண்டுகளாகஒதுக்கப்பட்ட நிதி என்னஆனது - தினகரன் கேள்வி

இரண்டு ஆண்டுகளாக நடந்த குடிமராமத்துப்பணிகள் குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும் என்று அமமுக பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

புதிதாக ஒதுக்கப்பட்ட நிதியில்வெளிப்படைத்தன்மையுடன்
பணிகளைமேற்கொள்ள வேண்டும்.
குடிமராமத்துப்பணிகளுக்காக கடந்தஇரண்டாண்டுகளாகஒதுக்கப்பட்ட நிதி என்னஆனது என்றே தெரியாதநிலையில், கடுமையானகுடிநீர் பஞ்சத்தில் தவிக்கும்தமிழக மக்களைத் திசைதிருப்பவே  புதிதாக ரூ.500கோடி ஒதுக்கப்படுவதாக  அரசுஅறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் ஏரி,குளம், ஆறு, கால்வாய்போன்றவற்றைத் தூர்வாரிபராமரிப்பதற்காக 2017 ஆம்ஆண்டு ரூ.100 கோடியும், 2018ஆம் ஆண்டு ரூ.331 கோடியும்ஒதுக்கப்பட்டது. ஆனால்பெரும்பாலான இடங்களில்இந்த நிதியைக் கொண்டுகுடிமராமத்துப் பணிகளைபெயரளவுக்குச்செய்துவிட்டு, வேலைமுடிந்துவிட்டதாக கணக்குகாட்டியுள்ளதாக மக்கள்குற்றஞ்சாட்டுகிறார்கள்.அதனை நிரூபிக்கும்வகையில் ஆறுகளிலும்,வாய்க்கால்களிலும்ஆளுயரத்திற்குப் புதர்மண்டி கிடந்ததையும் கடந்தஇரண்டு ஆண்டுகளில்நம்மால் பார்க்க முடிந்தது.ஏரி, குளங்களிலும் இதேநிலைமைதான் இருந்தது.இதனால் காவிரி நீர்கடைமடை பாசனப்பகுதிகளுக்குச் சென்றுசேரவில்லை என்ற புகாரும்எழுந்தது. அப்படியானால்இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிஎல்லாம் எங்கே போனதுஎன்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில்நடப்பாண்டில் குடிமராமத்துப்பணிகளுக்காக ரூ.499 கோடியே68 லட்சம்ஒதுக்கப்பட்டிருப்பதாகபழனிச்சாமியின் நேரடிகட்டுப்பாட்டில் உள்ளபொதுப்பணித்துறை இப்போதுஅறிவித்திருக்கிறது.ஏற்கனவே ஒதுக்கப்பட்டநிதியே என்ன ஆனது என்றுதெரியாத நிலையில்பழனிச்சாமி அரசின் புதியஅறிவிப்பு மக்களைஏமாற்றும் வேலையே ஆகும்.

தமிழகம் முழுதும்கடுமையான குடிநீர்ப்பஞ்சத்தில் மக்கள் தவியாய்தவிக்கும்போது, அதனைஎதிர்கொள்வதற்குத் தேவையானநடவடிக்கைகளைமேற்கொள்ளாதஆட்சியாளர்கள், மக்களைத்திசை திருப்பவேஇதுபோன்ற வெற்றுஅறிவிப்புகளைவெளியிடுகின்றனர்.

உண்மையிலேயேஇவர்களுக்கு நீர்மேலாண்மையில் அக்கறைஇருக்குமானால், கடந்தஇரண்டாண்டுகளாககுடிமராமத்துப் பணியின் கீழ்எந்தெந்த நீர்நிலைகள்தூர்வாரி சீரமைக்கப்பட்டனஎன்ற வெள்ளைஅறிக்கையை உடனடியாகவெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிதாகஒதுக்கப்பட்டிருக்கும்நிதியைக் கொண்டுஎந்தெந்த நீர்நிலைகளில்,என்னென்ன பணிகள்நடைபெறுவிருக்கின்றனஎன்ற பட்டியலை மாவட்டவாரியாக வெளியிடவேண்டும்.

ஏற்கனவே உள்ள அரசுவிதிகளின் படி தொடர்புடையஇடங்களில் என்ன பணி,எவ்வளவு நிதி, ஒப்பந்ததாரர்யார், எப்போது செய்து முடிக்கவேண்டும் போன்றவிவரங்களைவெளிப்படையாக எழுதிஅறிவிப்புப் பலகையாகவைக்க வேண்டும். மேலும்அந்தந்த ஊர்களில் இருக்கும்விவசாய அமைப்புகள், கட்சிசாராத கிராமப்பிரதிநிதிகளைக் கொண்டகுழுக்களை அமைத்துஇப்பணிகளைக்கண்காணிப்பதற்கானஏற்பாட்டையும் செய்யவேண்டும். இதெல்லாம்செய்யாமல் வெறுமனேஅறிவிப்பை வெளியிட்டால்,அது நிச்சயமாக மக்களைஏமாற்றும் வேலையாகதான்இருக்க முடியும். அடிப்படைத்தேவையான தண்ணீர்பிரச்சினையைக் கூடஇவ்வளவு அலட்சியமாககையாண்டால் மக்கள்இவர்களை நிச்சயம் மன்னிக்கமாட்டார்கள்.               
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.                                             Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.