ETV Bharat / state

'சின்னம் இல்லைனா ஈபிஎஸ் கூட்டம் நெல்லிக்காய் போல சிதறிவிடும்' - டிடிவி தினகரன் - அதிமுக

இரட்டை இலை சின்னம் மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள கூட்டம் நெல்லிக்காய் மூட்டை போல சிதறிவிடும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
author img

By

Published : Dec 28, 2022, 5:55 PM IST

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 28) சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'ஒன்றிய நகர பேரூராட்சித் தலைவர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமமுக-வில் இருந்து நிர்வாகிகளை பிடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த சில ஆண்டுகளாக 200 முதல் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.

எங்களை கண்டு அவர்களுக்கு பயம். அதனால்தான், இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக வீரர்கள் பட்டாளம். அதனால் எங்களுக்குப் பாதிப்பு இல்லை. சொந்தப் பிரச்னையின் காரணமாகவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து சிலர் வெளியேறுகிறார்கள்' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், 'இந்த நிர்வாகிகள் சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பதற்காக கூடி உள்ளோம். அதிமுக கட்சி தவறானவர்களின் கையில் உள்ளது. அதனால்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. வருங்காலத்தில் தமிழகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்கக்கூடிய வலுவான தொண்டர்களுடைய கழகமாக உருவாக்கப்பட்டது, இந்த கட்சி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி நடைபெறும் என தெரிவிப்பது எடப்பாடி பழனிசாமியின் பலவீனத்தை காண்பிக்கிறது' என்றார்.

ஜெயா டிவியில் உங்களது செய்திகள் வருவதில்லையே என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, 'ஜெயா டிவியில் எனது செய்திகள் வருவதில்லை என்பதை நீங்கள் ஜெயா தொலைக்காட்சி நிருபர் இடம்தான் கேட்க வேண்டும். எனது உறவினர், தொலைக்காட்சி வைத்திருந்தால், எனது செய்தியை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை' எனப் பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், 'சின்னம் மட்டும் இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள கூட்டம் நெல்லிக்காய் மூட்டை போல சிதறி போகும். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சண்டை போட்டுக்கொள்வதால் இரட்டை இலை முடங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் கூட்டணி இல்லை என்றால் தனித்துப்போட்டியிடுவோம்' என்றார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது' - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.