ETV Bharat / state

பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த விவகாரம் - திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்! - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அரியலூரில் பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த விவகாரத்தில், திமுக நிர்வாகி மீதும், வழக்குப்பதிவு செய்ய காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

DHINAKARAN
காவல்துறை
author img

By

Published : Jul 24, 2023, 5:58 PM IST

சென்னை: அரியலூர் மாவட்டம் வாளரகுறிச்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அன்பரசன் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வேறு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசரிடம் கேட்டு அச்சமூகத்தினர் தகராறு செய்துள்ளனர். அப்போது, பட்டியலினத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசை ஊர் மக்கள் முன்பு காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அன்பரசன் அளித்த புகாரின் பேரில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பட்டியலினத்தவரை காலில் விழ வைத்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இச்சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

வாளரக்குறிச்சியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவரின் மகளுக்கு நடந்த மஞ்சள் நீராட்டு விழா ஊர்வலத்தின்போது ஆதிக்க சாதியினர் தெருவில் பட்டாசு வெடித்ததாகவும், அங்கிருந்த கடையில் பட்டியலினத்தவர் புகைப்பிடித்ததற்காகவும் திமுக நிர்வாகி உள்ளிட்டோர் தீண்டாமை கொடுமையில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய உள்ளூர் போலீசார், இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதுடன், காவல்நிலையத்தின் முன்பே திமுக நிர்வாகி உள்ளிட்ட சிலரது காலில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கொடூரமும் அரங்கேறியதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் நடைபெற்று 15 நாட்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகு மிகவும் பொறுமையாக வழக்கு பதிவு செய்து ஒருவரைக் கைது செய்ததுடன், தலைமறைவான திமுக நிர்வாகியைத் தேடி வருவதாக கூறுவது அபத்தமான செயலாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திமுக நிர்வாகிகள் இது போல தொடர்ந்து தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக கட்சித்தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இது போன்ற சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருப்பது பட்டியலின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினத்தவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: காவிரி நீரைத் திறக்க கோரிக்கை வைக்காதது ஏன்? - முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.