காலதாமதமாக பணிக்கு வந்ததற்கு தடை - ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி - Bus driver's suicide attempt in Chennai
சென்னை: காலதாமதமாக வந்ததால் அரசு பேருந்தை இயக்க வேண்டாம் என உயர் அலுவலர் கூறியதால் ஓட்டுநர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் அரிமுத்து. இவர் இன்று காலை 10 நிமிடங்கள் காலதாமதமாக பணிக்கு வந்ததால் பணிமனையின் கிளை மேலாளர் பாலு, பேருந்தை இயக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அரிமுத்து, உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் அவர்மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் அரிமுத்து கூறியபோது, '10 நிமிடங்கள் காலதாமதம் ஆனதால் என்னை பேருந்தை இயக்க வேண்டாம் என்று கிளை மேலாளர் கூறினார். எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சர்ரென்று வந்த சரக்கு வேன், சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்
இது குறித்து அரிமுத்து கூறியது:
10 நிமிடம் காலதாமதம் ஆனதால் என்னை பேருந்தை இயக்க வேண்டாம் என்று கிளை மேலாளர் கூறுகிறார், எவ்வளவு கெஞ்சி பார்த்தும் கேட்கவில்லை, என்று தெரிவித்தார்,Conclusion: