ETV Bharat / state

இன்னைக்கு ஒரு பிடி! தாம்பரத்தில் மிகப் பெரிய 'சிறுதானிய கேக்' - உலக சாதனை அங்கீகாரம்!

தாம்பரம் மாநகராட்சி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி ஆகியவை இணைந்து மிகப்பெரிய சிறுதானிய கேக் தயாரித்து நிகழ்த்திய உலக சாதனைக்கு டிரைம்ப் வேல்ர்ட் ரெக்கார்ட்ஸ் (Triumph World Records) அங்கீகாரம் அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 8:17 AM IST

சிறுதானிய உணவுத் திருவிழா 2023

செங்கல்பட்டு: தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தாம்பரம் மாநகராட்சி இணைந்து 'சர்வதேச சிறுதானியங்கள் வருடம் 2023'-யை முன்னிட்டு சிறுதானிய உணவு பெருவிழா, உலக சாதனை நிகழ்வு, மற்றும் சிறுதானிய தான்யன் Mascot வெளியீடு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட 11 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளை தயாரித்து காட்சிப்படுத்தினர்.

குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, அணையாளர் அழகு மீனா ஐ.ஏ.எஸ், சமையல் கலைஞர் தாமோதரன், மாணவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டு உணவுகள் ருசி பார்த்தனர்.

மேலும், எஸ்.ஆர்.எம்.உணவக மேலாண்மை கல்லூரி சார்பாக ஜாக்கரி 180 கிலோ, நீர் 50 லிட்டர், வெஜிடபிள் ஆயில் 100 கிலோ, வெண்ணிலா 500 எம்.எல் மற்றும் சாமை, தினை, குதிரைவாலி, வரகரிசி, பனி அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் அடங்கிய மிகப்பெரிய 'சிறுதானிய கேக்' தயாரித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்த கேக் நீளம் 17 அடி, 7½ அடி அகலம் கொண்டது. 550 கிலோ எடை, 119 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கேக்கை 18 மணி நேரத்தில் 60 மாணவர்கள், 60 ஆசிரியர்கள் சேர்ந்து தயாரித்து காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்கள் அருசுவையான இந்த சிறுதானிய கேக்-யை ஆசையுடன் போட்டிப்போட்டு கொண்டு ருசித்து சாப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியோரின் அருசுவையான இந்த படைப்பை அங்கீகரித்து டிரைம்ப் வேல்ர்ட் ரெக்கார்ட்ஸ் (Triumph World Records) என்ற நிறுவனம் சான்றிதழ் வழங்கி உள்ளது.

இன்னைக்கு ஒரு பிடி! தாம்பரத்தில் மிகப் பெரிய 'சிறுதானிய கேக்' - உலக சாதனை அங்கீகாரம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தற்போது தான் சிறுதானியத்தின் அருமை தெரிந்திருக்கிறது என்றும் அதனால் தான், அரசு மாவட்டம் தோறும் சிறுதானியம் உட்கொள்வது குறித்து கண்காட்சிகளை ஏற்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றும் கூறினார். இதன் பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தேநீர் கடையில் அமைச்சர் உள்ளிட்டோர் அமர்ந்து தேநீர் பருகினர்.

இதில், பங்கேற்ற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அங்கு அமைக்கப்பட்ட செல்பி ஸ்டிக்கில் ஒன்றாக இணைந்து உற்சாகமாக வீடியோக்கள் பலவற்றை பதிவு செய்தனர்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் இன்று (மார்ச்.11) மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் சிறுதானிய உணவுகளை கண்டும், உண்டும் ருசிக்கலாம் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர். ருசியான சிறுதானிய உணவுகளை உண்டு உடல் ஆரோக்கியம் அடைய விரும்புவோர் சிறுதானிய உணவு பெருவிழா நடந்து வரும் தாம்பரத்திற்கு செல்ல இதுவே சரியான நாளாகும்.

இதையும் படிங்க: உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் சூதாட்டம்: "மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது வருத்தம்" - மருத்துவர் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.