ETV Bharat / state

முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு நாள் அறிவிப்பு - exam date announced

சென்னை: முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Teacher Selection Board
author img

By

Published : Aug 14, 2019, 8:44 PM IST

இதுகுறித்து தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்றும், 2,144 பணியிடங்களுக்கு இதுவரை 1.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:முதுகலை ஆசிரியர்,உடற்கல்வி இயகுநர் பணி
ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

Body:சென்னை,
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் 2144 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பம் பெறும்போதே அறிவித்திருந்தது. இப்பொழுது எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி முதுகலை ஆசிரியர் பணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.