ETV Bharat / state

'Mission Chennai' வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்!

author img

By

Published : Dec 1, 2022, 5:37 PM IST

"Mission Chennai" என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் "Mission Chennai " என்ற திட்ட வாகனத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த மே 2020 முதல் மார்ச் 2021ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 241 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்கள் 242.67 கோடி ரூபாய் வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் சுகாதாரம் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் "Mission Chennai" என்ற திட்ட வாகனத்தை (Mobile Medical Vehicle) கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர், “மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகம் மற்றும் அனைத்துப் பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனைகள் செய்திட CSR திட்டம் - ஹுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நடமாடும் மருத்துவ வாகனத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

மேலும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த "Mission Chennai" என்ற திட்டத்தின் வாயிலாக இரண்டு பயிற்சி மையத்தில், தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு சம்பந்தமாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சியும் (Training) அளிக்கப்படவுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: வேட்புமனுவில் போலி தகவல்: முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.