ETV Bharat / state

யூனிஃபார்ம் எங்கே? - கேள்வி எழுப்பும் போக்குவரத்து ஊழியர் சங்கம்..! - uniform to transport employees news

மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நடப்பாண்டுக்கான சீருடை, காலணி, பணப்பை போன்றவற்றை வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 7:07 PM IST

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நடப்பாண்டுக்கான சீருடை இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஒப்பந்தப்படி சீருடை, காலணி, பணப்பை வழங்க வேண்டும் என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, நிர்வாக இயக்குநருக்கு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.தயானந்தம் அனுப்பிய கடிதத்தில், "மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தில், ஏற்றுக் கொண்டபடி ஆண்டுக்கு 2 முறை சீருடை வழங்க வேண்டும்.

மேலும் நடப்பாண்டுக்கான சீருடை இதுவரை வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இரண்டாண்டுக்கு ஒரு முறை 1 செட் ஷூ, ஆண்டுக்கு 2 செட் காலுறை அல்லது 8 மாத இடைவெளியில் 1 செட் செருப்பு வழங்க வேண்டும். இவைகள் நீண்ட காலமாக வழங்கப்படவில்லை.

மேலும், நடத்துநர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணப்பை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்குள் பணப்பை கிழிந்து விட்டால் அதை நிர்வாகத்திடம் ஒப்படைத்து, புதிய பணப்பை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பல ஆண்டுகளாக, நடத்துநர் பணப்பை வழங்குதலை ஒப்பந்தத்தில் உள்ளவாறு முறையாக அமல்படுத்தவில்லை.

எனவே, ஒப்பந்தத்தில் உள்ளபடி மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சீருடை, காலணி, பணப்பை போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும்" என அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி. தயானந்தம் அனுப்பிய கடித்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.