சென்னை: தமிழின் இடதுசாரி மரபின் மிக முக்கியமான மார்க்சிய சிந்தனையாளரும், சோதிப் பிரகாசத்தின் உற்ற தோழனுமாக அறியப்பட்டவர், வேட்டை எஸ். கண்ணன். இவர் பல ஆங்கிலப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். 72 வயதான இவர் சென்னை, பள்ளிக்கரணையில் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 13) மதியம் 3 மணி அளவில் காலமானார்.
மொழி பெயர்ப்பாளர் வேட்டை எஸ். கண்ணன், தென் இந்திய கிராம தெய்வங்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், உலக சினிமா வரலாறு, சினிமா ஒளிப்பதிவின் 5C-க்கள், வாஸ்கோடா காமா, இந்தியக் கோட்டோவியங்கள், புரட்சியாளர்களின் நினைவுச் சித்திரங்கள், மத்தியக் கால இந்திய வரலாறு, மார்க்சின் தத்துவம் (இன்னும் வெளியிடப்படவில்லை) ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
மேலும், வேட்டை எஸ். கண்ணன் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்து உள்ளார். சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ’விடுதலை’ திரைப்படத்தின் கதையில் மிகுந்த பங்கினை ஆற்றி உள்ளார்.
இதையும் படிங்க: ''சிறந்த டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது'' - ஆளுநர் ரவி