ETV Bharat / state

3ஆம் பாலினத்தவருக்கு சலுகை - தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

hc
author img

By

Published : Sep 17, 2019, 9:16 AM IST

மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் எனக் கோரி கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகே மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதால், சுய அடையாளத்தின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, சுய அடையாளம் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினால், திருநங்கைகளுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து, விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Intro:Body:மூன்றாம் பாலினத்தவர்களின் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்பட உள்ளது என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அடையாள அட்டை வழங்க வேண்டும் எனக் கோரி கிரேஸ் பானு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனை நடத்திய பிறகே மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதால், சுய அடையாளத்தின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகக் கூறி, தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, சுய அடையாளம் மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கினால், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடைமுறை பின்பற்றப்பட உள்ளது என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.