ETV Bharat / state

திருநங்கைகள் காவலர் தேர்வெழுத தடையில்லை - உயர் நீதிமன்றம்

சென்னை: இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 3 திருநங்கைகளை தேர்வெழுத அனுமதிக்கும் படி, சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கைகள் காவலர் தேர்வெழுத தடையில்லை
author img

By

Published : Jun 24, 2019, 11:56 PM IST

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கடந்த மார்ச் 6ஆம் தேதி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான 2,465 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, தகுதி அடிப்படையில் (மெரிட்ஸ்) 18 வயதிலிருந்து, எஸ்.சி,எஸ்.டி, பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழை விதவைகள், முன்னாள் ராணுவ வீரர்கள் என வயது உச்சவரம்பு 45 வரை நிர்ணயிக்கப்பட்டது.

இதில், திருநங்கைகளான கோவில்பட்டியைச் சேர்ந்த தேன்மொழி(29), சாரதா(29), சென்னையைச் சேர்ந்த தீபிகா(27) இணையதளம் மூலம் விண்ணப்பித்தபோது அதிக வயதுடன் விண்ணப்பிப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், ’திருநங்கைகளுக்கு என எந்த வயது வரம்பும் குறிப்பிடப்படவில்லை. அதனால் வேலைவாய்ப்பில் ஏழை விதவைகளுக்கான 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வில், தங்களைத் தேர்வெழுதச் சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும். திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது’ என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், நீதிமன்ற உத்தரவைப் பெற்று 3 திருநங்கைகளும் மீண்டும் விண்ணப்பித்து ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுத அனுமதிக்கும் படி சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். மேலும், எந்த அடிப்படையில் 3 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Intro:nullBody:இரண்டாம் நிலை காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 3 திருநங்கைகளை தேர்வு எழுத அனுமதிக்கும் படி சீறுடை பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீறுடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கடந்த மார்ச் 6ம் தேதி இரண்டாம் நிலை காவலர்களுக்கான 2465 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, தகுதி அடிப்படையில் (மெரிட்ஸ்) 18 வயதிலிருந்து, எஸ்.சி,எஸ்.டி, பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழை விதவைகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் என வயது உச்சவரம்பு 45 வரை நிர்ணயிக்கப்பட்டது.

இதில், திருநங்கைகளான கோவில்பட்டியை சேர்ந்த தேன்மொழி(29), சாரதா(29) மற்றும் சென்னையை சேர்ந்த தீபிகா(27) ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த போது அதிக வயதுடன் விண்ணப்பிப்பதால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்ததை அடுத்து 3 பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், திருநங்கைகளுக்கு என எந்த வயது வரம்பும் குறிப்பிடப்படவில்லை. அதனால் வேலைவாய்ப்பில் ஏழை விதவைகளுக்கான 3% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வரும் 14 ம் தேதி நடைபெற உள்ள தேர்வில் தங்களை தேர்வு எழுத சீறுடை பணியாளர் தேர்வானையத்துக்கு உத்தரவிட வேண்டும். திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட கூடாது என உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்துயுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், நீதிமன்ற உத்தரவை பெற்று 3 திருநங்கைகளும் மீண்டும் விண்ணப்பித்து ஜூலை 14 ம் தேதி நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கும் படி சீறுடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும், எந்த அடிப்படையில் 3 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என
சீறுடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டது வழக்கை வரும் 27 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.