புரெவி புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கியுள்ளது.
அபிராமபுரம் கோவிந்தசாமி தெருவில் இருந்த டிரான்ஸ்பார்மர் இன்று (டிச.4) காலை திடீரென சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது.
இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக அதன் மேல் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!