சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் என்பவரிடம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தியபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் விசாரனைக்கு அழைத்து வரும் வழியிலேயே வாந்தி எடுத்தும் மயக்கம் நிலையிலும் இருந்துள்ளார். இதனால் காவல் துறையினர், அருகில் இருந்த பவித்ரா தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
பிறகு மயக்கமடைந்த நிலையில் சுமார் 7 மணியளவில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ராஜசேகர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ராஜசேகரின் இடது தொடைப்பகுதியில் காயம் இருப்பதாகவும், வேறு வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லை என்பதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ராஜசேகர் தொடையில் காயம் இருந்ததாக விசாரணையில் தகவல் வெளியானதால், விசாரணைக் கைதி சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏழு நிமிடம் இடைவெளியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம்: சிசிடிவி காட்சி வெளியீடு