சென்னை: இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், "பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆஞ்சலோ இருதயசாமி, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அனிதா, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ராமகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ரோஸ் நிர்மலா, கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக என்.கீதா, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக செந்திவேல் முருகன், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முருகன், வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக முனுசாமி, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆறுமுகம், தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கபீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கே.பி.மகேஸ்வரி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புகழேந்தி, திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அய்யண்ணன், நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மதிவாணன், கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக விஜயலட்சுமி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சத்தியமூர்த்தி, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மதன்குமார், தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கணேஷ்மூர்த்தி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலு முத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கருப்பசாமி, ராமநாதப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சுபாஷினி, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அருள்செல்வம், பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக அறிவழகன், தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சிவக்குமார், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பாலதண்டாயுதபாணி, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவராக பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுலவராக முத்துகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மகேஸ்வரி, சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மணிவண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறை துணை இயக்குனராக வெற்றிச்செல்வி, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் நிர்வாக அலுவலராக ஞானகெளரி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக குணசேகரன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக திருவளர்செல்வி, பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குநராக குணசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகம் - தொலைதூரப் படிப்புகளில் சேர மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்