ETV Bharat / state

ஆகஸ்ட் மாதம் இறுதிவரை சிறப்பு ரயில் சேவைகள் ரத்து! - தமிழ்நாட்டு ரயில் சேவைகள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவைகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் சேவை
ரயில் சேவை
author img

By

Published : Aug 14, 2020, 2:03 PM IST

கரோனா வைரஸ் காரணமாக, அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மக்களின் அத்தியாவசிய பயணங்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தமிழ்நாட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லிக்கு ராஜதானி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையில் கரோனா தொற்று அதிக அளவில் இருந்ததால் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

திருச்சி- செங்கல்பட்டு இன்டர்சிட்டி, திருச்சி- செங்கல்பட்டு சிறப்பு ரயில், மதுரை- விழுப்புரம், கோவை- காட்பாடி, அரக்கோணம்- கோவை, கோவை - மயிலாடுதுறை, திருச்சி- நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு சில காலம் இயக்கப்பட்டு வந்தன.

இதனைத்தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் ரயில் போக்குவரத்தை நிறுத்த தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி சிறப்பு ரயில் சேவைகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சென்னை சென்ட்ரல் - புதுடெல்லி ராஜதானி சிறப்பு ரயில் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு 100% பணம் திரும்ப வழங்கப்படும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு தானாக பணம் திரும்ப செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் பெற்றவர்கள் ஆறு மாதத்திற்குள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.