ETV Bharat / state

போதிய பயணிகள் இல்லாததால் முக்கிய ரயில்கள் ரத்து!

சென்னை: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக திருச்சி-ராமேஸ்வரம், கோயம்புத்தூர்-நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் ஆதரவின்மையால் முக்கிய ரயில்கள் ரத்து

author img

By

Published : May 18, 2021, 8:42 AM IST

கரோனா பரவல் காரணமாக ரயிலில் செல்லும் பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் திருச்சி-ராமேஸ்வரம், கோயம்புத்தூர்-நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

“ரயில் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக வண்டி எண் 06849 திருச்சி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், வண்டி எண் 06850 ராமேஸ்வரம் - திருச்சி சிறப்பு ரயில் ஆகியவை மே 19 முதல் மே 31 வரை ரத்து செய்யப்படுகிறது.

மே 20 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நாகர்கோவிலிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02667 வண்டி, நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில், மே 19ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை கோயம்புத்தூரிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02668, கோயம்புத்தூர்- நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர், கொச்சுவேலி - மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் மே மாதம் இறுதிவரை ரத்து செய்யப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'இந்தியா முழுவதும் ரயில் மூலம் 8,700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சென்றது' - இந்தியன் ரயில்வே

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.