ETV Bharat / state

நெருங்கும் புத்தாண்டு.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்! - new year celebration

Traffic rules for New year celebration: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சில போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகபோக்குவரத்து மாற்றங்கள் குறித்து செய்தி குறிப்பு வெளியிட்ட காவல்துறை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 4:28 PM IST

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, சென்னையில் டிச.31ஆம் தேதி அன்று மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை மற்றும் பிற பொழுதுபோக்கு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கூடும் நிலையில், எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காத வகையில் புத்தாண்டை கொண்டடுவதற்கு போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

அதில் காமராஜர் சாலை மற்றும் எலியட் கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடற்கரை உட்புறச்சாலையில் 31.12.2023 அன்று இரவு 7 மணி முதல் 01.01.2024 அன்று காலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். கடற்கரை உட்புறச் சாலையில் 31.12.2023 அன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படும்.

காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை 31.12.2023 இரவு 8 மணி முதல் 01.01.2024 காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்காக மூடப்படும். அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி, ஆர்.ஏ.புரம் 2வது மெயின் ரோடு, ஆர்.கே மட் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாகச் செல்லலாம்.

டாக்டர் ஆர்.கே சாலையில் இருந்து காமராஜர் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஆர்.கே.மட் சாலை, லஸ் சந்திப்பு, மந்தவெளி, தெற்கு கால்வாய் கரை சாலை வழியாக சாந்தோம் ஹை ரோடு மற்றும் கிரீன்வேஸ் சாலையைs சென்றடையலாம்.

பாரிஸ் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்குs செல்ல விரும்பும் வாகனங்கள், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் வடக்கு கோட்டை சுவர் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா பாய்ண்ட், அண்ணாசாலை வழியாகச் சென்று அவர்களின் இலக்கை அடையலாம்.

வாலாஜா பாயிண்ட், சுவாமி சிவானந்தா சாலை, (தூர்தர்ஷன் கேந்திரா அருகில்) வாலாஜா சாலை (விக்டோரியா விடுதி சாலை அருகில், பாரதி சாலை X விக்டோரியா விடுதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை (எம்ஆர்டிஎஸ் அருகில்), லாயிட்ஸ் சாலை x நடேசன் சாலை மற்றும் நடேசன் சாலை X டாக்டர் ஆர்.கே.சாலை சந்திப்பில் இருந்து காந்தி சிலை வரையில் போக்குவரத்து அனுமதி இல்லை. தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படமாட்டாது.

ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை மற்றும் வாலாஜா முனையிலிருந்து போர் நினைவிடம் நோக்கி கொடி மரச்சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. அடையாரிலிருந்து பாரிஸ் நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துக்கள் அனைத்தும் தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு மந்தவெளி, வி.கே.ஐயர் சாலை, புனித மேரி சாலை, லஸ் சந்திப்பு, இராயப்பேட்டை, கத்திட்ரல் ரோடு அண்ணாசலை வழியாகச் செல்லலாம்.

மாநகரப் பேருந்துக்கள் பாரிஸிலிருந்து அடையார், திருவான்மியூர் தெற்கு நோக்கிச் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆ.ர்.பி சுரங்கப்பாதை வடபகுதிக்கு திருப்பிவிடப்பட்டு என்.எப்.எஸ் ரோடு, முத்துச்சாமி சாலை, அண்ணாசாலை, ஜெமினி
மேம்பாலம், கத்திட்ரல் ரோடு, வி.எம். சாலை, லஸ் சந்திப்பு மந்தவெளி வழியாக தெற்கு கால்வாய் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

அனைத்து மேம்பாலங்களும் 31.12.2023 அன்று இரவு 10 மணி முதல் 01.01.2024 அன்று காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். மேலும் போக்குவரத்து காவல்துறை, ANPR கேமராக்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன. கேமராக்கள் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதுடன் வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.

மேலும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் புத்தாண்டை முன்னிட்டு வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், சாகச சவாரி செய்தல், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்லுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஒலி மாசு ஏற்படுத்துதல் போன்றவற்றை கண்டறிந்து தொழில்நுட்ப முறையில் ANPR கேமரா மூலமாக தானகவே வழக்குகள் பதிவு செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கடைபிடித்து, சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பொங்கலுக்குப் பின் வீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.