சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்திலிருந்து கிண்டி நோக்கி அதிவேகமாக மாநகரப் பேருந்து சென்றது. இது முன்னாள் சென்ற வாகனங்களை இடிப்பது போல் சென்றதை பார்த்த குரோம்பேட்டை போக்குவரத்து காவலர், மாநகரப் பேருந்தை குரோம்பேட்டை சிக்னல் அருகே தடுத்து நிறுத்தி, ஓட்டுநரை கண்டித்தார்.
பின்னர், இதுபோல் இன்னொரு முறை அதிவேகமாகப் பேருந்தை இயக்கினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவலர், மாநகரப் பேருந்தை அனுப்பி வைத்தார். தவறு என்று தெரிந்த உடன் அரசுப் பேருந்தை நிறுத்தி எச்சரித்து அனுப்பிய போக்குவரத்து காவல் துறையினரை வாகன ஓட்டிகள் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: ஓஎல்எக்ஸில் விற்பனைக்கு வந்த மோடியின் அலுவலகம்