ETV Bharat / state

'விரைவில் சென்னையை ஸ்தம்பிக்கும் போராட்டம்' - தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை! - தமிழ்நாடு போக்குவரத்துத் துறை

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு உரிய பணப் பலன்களை அளிக்க அரசு தாமதிக்குமானால் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கர்சன் தெரிவித்துள்ளார்.

கர்சன்
author img

By

Published : Jun 11, 2019, 2:11 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் ஆறாவது ஆண்டு பேரவைக் கூட்டம் மதுரை மண்டலத்தில் இன்று நடைபெற்றது. அதன் பின்னர் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கர்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வரவேண்டிய பணப்பலன்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

அவ்வப்போது நடத்திய சில போராட்டங்களின் விளைவாக சிலருக்கு பணப் பலன்களை வழங்கினாலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படியோ ஓய்வூதியப் பலன்களோ வழங்கப்படவில்லை.

கர்சன்
தமிழ்நாடு அரசு ஜூலை மாதத்திற்குள் இதனை வழங்க தவறுமானால் சென்னை மாநகரமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப் பெரும் போராட்டத்தை மேற்கொள்வோம். இது குறித்து ஆகஸ்ட் 13, 14ஆம் தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அறிவிப்பு செய்வோம். இதனை தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு எச்சரிக்கையாகவே நாங்கள் தெரிவிக்கிறோம்" என தெரிவித்தார்.

Intro:தமிழக அரசு தமிழக போக்குவரத்துத் துறையில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்கள் உரிய பண பலன்களை அளிக்க தாமதிக்கும் ஆனால் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை நாங்கள் நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கர்சன் கூறினார்

Body:தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மதுரை மண்டலத்தில் ஆறாவது ஆண்டு பேரவை இன்று நடைபெற்றது அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கணேசன் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வரக்கூடிய பணப்பலன்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை அவ்வப்போது நடத்திய சில போராட்டங்களின் விளைவாக சிலருக்கு பண பலன்களை வழங்கினாலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி யோ ஓய்வூதிய பலன்களோ வழங்கப்படவில்லை வரும் ஜூலை மாதத்திற்குள் தமிழக அரசு இதனை வழங்க தவறுமானால் சென்னை மாநகரமே தண்டிக்கும் வகையில் மிகப் பெரும் போராட்டத்தை தலைநகரில் மேற்கொள்வோம் இதுகுறித்து ஆகஸ்ட் 13 14ம் தேதிகளில் நடைபெற உள்ள திண்டுக்கல்லில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் அறிவிப்பு செய்வோம் இதனை தமிழக போக்குவரத்து துறைக்கு எச்சரிக்கையாகவே நாங்கள் தெரிவிக்கிறோம் என்றார்

முன்னதாக பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் அனைவரும் ஊர்வலமாகச் சென்று அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை அடைந்தால் அங்கு அவர்களது ஆறாவது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது

இப்பறவை கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழக அரசின் போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.