சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் 3 நாட்களில் 12 லட்சம் பேர் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றனர். தற்போது விடுமுறை முடிவுற்ற நிலையில், வெளியூர் சென்ற பயணிகள் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.
சென்னையின் நுழைவான பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த சிறப்பு பேருந்துகள், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் சென்னை வந்து கொண்டிருப்பதால், கூடுவாஞ்சேரி முதல் பெருங்களத்தூர், தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்னைக்குள் செல்ல, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் மாநகர பேருந்துகள் குறைவாக இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: இன்று அமலாகிறது புதிய மோட்டார் வாகனச் சட்டம்... வாகன ஓட்டிகளே கவனம்...