சென்னை மணலியில் உள்ள நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது.இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் சாலையைச் சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறையினரிடம், மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியின் போக்குவரத்து காவலர்கள், தாமாக முன்வந்து தங்களின் சொந்த செலவில் சாலைகளில் உள்ள பள்ளங்களைக் கருங்கல், ஜல்லி கலந்த சிமெண்ட் கலவை மூலம் நிரப்பி சாலையைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுநலன் கருதிச் சேதமடைந்த சாலையைப் போக்குவரத்து காவலர்கள் சமூக அக்கறையோடு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சுபஸ்ரீ வழக்கு: அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு நிபந்தனை ஜாமின்!