கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை சாலைகளில் 550 சந்திப்புகளில், 408 சிக்னல்களில் போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் 3,500 காவலர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று காவல் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதைச் சோதிக்க பிரீத் அனலைசர் கருவியை வைத்து மட்டுமே சோதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாகன ஓட்டிகளை ஊதச் சொல்வதால் கொரோனா தொற்றும் அபாயம் உள்ளதால் அந்த நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. போக்குவரத்து காவலர்களுக்கு, தூசியினால் ஏற்படும் நுரையீரல் கோளாறுகளைத் தடுக்கும் வகையிலும், கொரோனா அச்சுறுத்தலாலும் புதிதாக 10 ஆயிரம் முகக் கவசங்கள் வாங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா எதிரோலி: சினிமா தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிப்பு !