ETV Bharat / state

நாளை சென்னை மாரத்தான்.. போக்குவரத்தில் முக்கிய மாற்றம்! - போக்குவரத்து காவல்துறை

Chennai Marathon 2024: சென்னையில் நாளை நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியை முன்னிட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் மாரத்தான் போட்டியால் போக்குவரத்து மாற்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 4:39 PM IST

சென்னை: சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42.195 கிமீ., 32.186 கிமீ, 21.097 கிமீ மற்றும் 10 கிமீ) பிரெஷ் வொர்க் மாரத்தான் ஓட்டம், சென்னை மாரத்தான் என்ற பெயரில் நாளை (ஜன.6) காலை 4 மணி முதல் நடைபெறுகிறது. இந்த சென்னை மாரத்தான் ஓட்டம், நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர், கே.கே.சாலை, இ.சி.ஆர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தைச் சென்றடைய உள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்து காவல்துறையினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதில் அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க பாலம், டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம்போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம். போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

மேலும், வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு, வாலாஜா பாயிண்ட் அண்ணாசாலை வழியாக தங்களது இலக்கைச் சென்றடையலாம். ஆர்.கே சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே மட் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். மத்திய கைலாஷ்-லிருந்து வரும் வாகனங்கள், பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்படமாட்டது.

அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கைச் சென்றடையலாம். காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அவ்வாகனங்கள் LB சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக தங்களது இலக்கைச் சென்றடையலாம். பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியாட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பிவிடப்படும்.

MTC பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, ML பார்க் நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது என போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 15 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.