தேசிய பாதுகாப்பு வாரத்தை கடைபிடிக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தை அடுத்துள்ள ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில், சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போக்குவரத்து காவல் துறையினர், ஜியோ நிறுவன ஊழியர்கள் இணைந்து விழிப்புணர்வு பரப்புரை நடத்தினர்.
இந்நிகழ்வில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் பயன்படுத்த வேண்டாம் போன்ற பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவ்வழியாக வந்த அணைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லை ஒட்டப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பரப்புரையின்போது, அவ்வழியாக வந்த அணைத்து வாகனங்களிலும் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லை ஒட்டப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து தலைக்கவசம், சீட் பெல்ட் அணிந்து வாகன ஓட்டியவர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல் துறை, ஜியோ நிறுவனம் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு வாரத்தை கடைபிடிக்கும் வகையில் ஏழு நாட்களுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ஜியோ நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு பணியில் 50க்கும் மேற்பட்ட ஜியோ நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : 'கூலிக்கு மாரடிக்கும் கூட்டமல்ல'- இயக்குநர் களஞ்சியம்