ETV Bharat / state

வியாபாரிகளே உஷார்..! QR Code ஸ்கேனிங் முறைகேடு - வாலிபர் கைது - Chennai crime news

கடைகளில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் QR Code ஐ மாற்றி நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி செய்த ஊர்க்காவல் படை இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வியாபாரிகளே உஷார்..! QR Code ஸ்கேனிங் முறைகேடு - வாலிபர் கைது

author img

By

Published : Aug 11, 2022, 10:43 AM IST

சென்னை துரைப்பாக்கம் ஒக்கியம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த்(39). இவர் அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில், இவரது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட paytm QR Code ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக வாடிக்கையாளர்கள் அனுப்பும் தொகை வங்கி கணக்கிற்கு வராமல் இருப்பதாகவும், மோசடி நடப்பதாகவும் கூறி உரிமையாளர் ஆனந்த், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், டிபன் கடையில் ஒட்டி வைத்திருந்த QR Code ஐ ஸ்கேன் செய்து சிறிய தொகையை அனுப்பியுள்ளனர்.

அப்போது உரிமையாளர் ஆனந்த் உடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், பணம் சென்ற வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது ஸ்ரீதர் என்பவருடைய வங்கி கணக்கிற்கு பணம் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கண்ணகி நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் (21) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

QR Code ஸ்கேனிங் முறைகேடு - வாலிபர் கைது

அப்போது ஸ்ரீதர், “திருவான்மியூரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறேன். மோசடி செய்வதற்காக சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரிவதாக கூறி, போலியான அடையாள அட்டை தயாரித்து வைத்துள்ளேன்.

எனது வங்கி கணக்கை இணைத்த bharat pe என்ற QR Code ஐ தயார் செய்து டிபன், ஸ்டேஷ்னரி, ஹோட்டல் போன்ற கடைகளில் நுழைந்து உரிமையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, உரிமையாளர் ஒட்டியிருக்கும் QR கோட்டிற்கு மேலே எனது QR code ஐ ஒட்டி விடுவேன்” என கூறியுள்ளார்.

இவ்வாறு ஸ்ரீதரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, லட்சக்கணக்கில் அவர் சம்பாதித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல ஸ்ரீதர் கடந்த 15 நாட்களில் மட்டும் கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் 7 கடைகளில் QR code ஒட்டி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரீதர் மீது மோசடி, போலி ஆவணத்தை புனைதல், ஐடி பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். மோசடி செய்ய பயன்படுத்திய bharat pe Qr code ஐயையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், ஸ்ரீதரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாமூல் வேட்டையில் ஈடுபட்ட சின்ன ரவுடி - மாவுக்கட்டுடன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.