ETV Bharat / state

'தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றார்கள்' - வியாபாரிகள் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்யும் பொழுது தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்கின்றார்கள் என பிளாஸ்டிக் வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

author img

By

Published : Jul 14, 2022, 6:50 PM IST

தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - வியாபாரிகள் குற்றச்சாட்டு

சென்னை: ரிப்பன் கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகை அரங்கத்தில் மத்திய மற்றும் மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு தொடர்பாக வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் விநியோகிஸ்தர்கள் மற்றும் வியாபாரிகளிடையே பிளாஸ்டிக் தடை மற்றும் அதன் மாற்று பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த கலந்தாலோசனை நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் இதில் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை மாசு கட்டுப்பாடு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கரன், பிளாஸ்டிக் கப் உற்பத்தியாளர் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் பால சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள்:

மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டோம். பிளாஸ்டிக் சீட் போன்ற பொருட்களில் சில பயன்பாட்டிற்கு தான் தடை உள்ளது. ஆனால் உற்பத்தி, விநியோகத்திற்கு தடை இல்லை. கேரி பைகளுக்கு மட்டும் தான் தடை. மற்ற பிளாஸ்டிக் பைகளுக்கு தடையில்லை என எடுத்துரைத்ததை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

14 பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அதிகாரிகள் சோதனையின் போது தடையில்லாத பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து பறிமுதல் செய்கின்றனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

சோதனையின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யக்கூடாது என வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் 60 ஜிஎஸ்எம்-க்கு மேல் உள்ள நெய்யாத நெகிழி பைகளுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே பிளாஸ்டிக் கப்புகளுக்கு தடை. ஆனால் பேப்பர் கப்புகளின் உபயோகம் இன்று வரை உள்ளது.

மாநகராட்சி வளாகத்திலேயே பல்வேறு இடங்களில் பேப்பர் கப்புகள் மூலம் காபி, டீ உள்ளிட்டவை தரப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் கரோனா காலத்தில் இதன் மூலம்தான் கபசுர குடிநீரை விநியோகம் செய்யப்பட்டது.

பேப்பர் கப்பில் பிளாஸ்டிக் கோட்டிங் இல்லாத தொழில்நுட்பத்தில் தயாரிக்க பேப்பர் கப் தயாரிப்பு நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுக்காக 5 மாதமாக காத்திருக்கிறோம். அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பாக்சிங் போட்டியின் போது உயிரிழந்த இளம் வீரர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.