ETV Bharat / state

‘பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் வேண்டும்’ - டி.ஆர். பாலு கோரிக்கை - tr baalu

காஞ்சிபுரம்: பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு எம்.பி, கோரிக்கை வைத்துள்ளார்.

tr baalu
author img

By

Published : Sep 14, 2019, 4:53 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் அயப்பன்தாங்கல் ஊராட்சியில் திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான தா.மோ. அன்பசரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ”பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டம் இயற்றவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் சட்டம் கொண்டு வருவார் எனவும் தெரிவித்தார்.

டி.ஆர். பாலு செய்தியாளர் சந்திப்பு

மேலும், இக்கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் படப்பை. மனோகரன், திமுக நிர்வாகிகள் ராஜா தேசிங்கு, ஜெனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:தமிழகத்தில் பேனர் வைப்பதை  வரைமுறைப்படுத்த சட்டப்பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.Body:காஞ்சிபுரம்  மாவட்டம் அயப்பன்தாங்கல் ஊராட்சியில் திமுக இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏவுமான த.மோ.அன்பசரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு   திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் 
பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த  சட்டப்பேரவையில்  சட்டம் கொண்டு வர  வேண்டும் அதற்கு திமுக சார்பில் அழுத்தம் தரப்படும் என்றார்.
வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தில் சட்டம் இயற்றவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு  வந்தவுடன் ஸ்டாலின் சட்டம் கொண்டு வருவார் என்றார்.Conclusion:மேலும் தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் தற்போது முடங்கியுள்ளது.கடந்த 21 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில்
பல்வேறு நிறுவங்கள் உற்பத்தியை குறைத்து உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை என்று குற்றம்சாட்டினார்.இதற்கு பாஜக அரசு தான் காரணம் என்றார்.இதில் ஒன்றிய செயலாளர் படப்பை. மனோகரன் ராஜா தேசிங்கு,ஜெனா உட்பட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.