ETV Bharat / state

மக்களவை திமுக குழு தலைவராக டி.ஆர். பாலு தேர்வு! - திமுக

சென்னை: மக்களவைக் குழு திமுக தலைவராக டி.ஆர். பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

tr baalu
author img

By

Published : May 25, 2019, 6:44 PM IST

Updated : May 25, 2019, 6:59 PM IST

17ஆவது மக்களவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வென்றுள்ளது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 23 பேரும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதில், திமுக மக்களவைக் குழு தலைவராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு கனிமொழிக்கும், டி.ஆர். பாலுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக தகவல்கள் வெளியான நிலையில், டி.ஆர். பாலு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், மக்களவைக் குழு திமுக துணைத் தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை திமுக கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலங்களவைக் குழு திமக தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற உழைத்ததற்காக கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Intro:Body:

dmk 

Conclusion:
Last Updated : May 25, 2019, 6:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.