இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்து 693ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 85 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17ஆயிரத்து 915ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆகவும், மொத்தமாக இதுவரை 2,481ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க: திருச்சியில் மேலும் 138 பேருக்கு கரோனா உறுதி!