மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இதுவரை 2,10,77,500 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9,80,728 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்கள் ஆகியவற்றில் 65,635 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று புதியதாக 9,344 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து குணமடைந்து 5,263 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 9,02,022 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா பாதிப்பால் இன்று 39 பேர் இறந்துள்ளனர். இதுவரை 13,071 நபர்கள் கரோனா பாதிப்பால் இறந்தனர். சென்னையில் இன்று 2,884 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 22 பேர் தொற்றால் இறந்துள்ளனர். சென்னையில் 23,625 நபர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 2,34,692 பேருக்கு கரோனா பாதிப்பு