1. வரலாற்றில் மறைக்கப்பட்ட 1857 ஹிசார் புரட்சி!
பிரிட்டிஷ் படைகள் கோட்டைக்குள் இருந்தன, கிளர்ச்சியாளர்கள் வெளியே இருந்தனர். இதன் விளைவாக, பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
2. தோல்விக்கானக் காரணங்களைத் தேடுகின்ற அதிமுகவினர் - அமைச்சரின் குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை அதிமுக தேடி வருவதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்.
3. கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - வைகோ
கயத்தாற்றில் ஊமைத்துரையும், கட்டபொம்மனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
4. பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் ஆலோசனை!
தமிழ்நாட்டில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. வெளியாள் நுழைய 'உள் அனுமதிச்சீட்டு' முறை வேண்டும் - தமிழ் தேசியபேரியக்கம் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் நுழைகின்ற அயல் மாநிலத்தவரை கட்டுப்படுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நடைமுறையைப் போல் 'உள் அனுமதிச்சீட்டு' முறை (innerline permit) அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சிறப்பு அனுமதியை தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
6. சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய், மகள் உயிரிழப்பு - திடுக்கிடும் தகவல்
கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்ததால் தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது வந்துள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
7. புதிய பாதுகாப்பு தொழிற்சாலைகளை தொடங்கி வைத்த பிரதமர்
ஆவடியில் உள்ள திண் ஊர்தி தொழிற்சாலையில் பாரத பிரதமர் காணொலி காட்சி வழியாக 7 புதிய பாதுகாப்பு தொழிற்சாலைகளை தொடங்கிவைத்தார்.
8.துலாமில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்?
எந்தெந்த ராசிக்காரர்கள் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டத்தைப் பெறப்போகிறார்கள் என்பது குறித்து காண்போம்.
9. ஓய் செல்ஃபிக்கு இன்று பிறந்தநாள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
10. HBD பிரணிதா சுபாஷ்
நடிகை பிரணிதா சுபாஷ் இன்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.