ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 11 am  top ten news  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  11 மணி செய்திச் சுருக்கம்  காலை 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 1, 2021, 11:32 AM IST

Updated : Sep 1, 2021, 11:40 AM IST

1. ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

2. ஓபிஎஸ் மனைவி மறைவு- முதலமைச்சர் இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் தெரவித்துள்ளார்.

3. 'மோடி சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் காட்டுவது ஏன்?'

மனத்தின் குரல் நிகழ்ச்சியிலும், பொதுக் கூட்டங்களிலும் திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள்காட்டி பேசுகிற பிரதமர் மோடி, சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டுவது ஏன் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

4. கல்லூரிகளில் கூட்டம் நடத்தினால் நடவடிக்கை

கரோனா காரணமாக கல்லூரிகளில் கருத்தரங்குகள், கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்தக் கூடாது எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

5. தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்க வேண்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

6. கமுதி: சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுகவினரிடையே மோதல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை தொடர்பாக சுவர் விளம்பரம் எழுதுவதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கமுதி திமுக ஒன்றியச் செயலாளர் உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

7. மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

8. ரூ. 7 லட்சம் மோசடி- தம்பதி மீது வழக்குப்பதிவு

பல்லடத்தில் பேக்கரி குத்தகைக்கு எடுத்து நடத்தலாம் எனக் கூறி சமூக வலைதள நண்பரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9. சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை - தந்தை உள்பட இருவர் கைது

எட்டு வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமைபடுத்திய தந்தையையும், அவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த பெண்ணையும் குடியாத்தம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10. உளவுத்துறை தலைமை காவலரை கடத்தி பணம் கொள்ளை - ஒருவர் கைது

தெரிந்தவர் காரில் ஏறிய உளவுத்துறை தலைமைக் காவலருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடம் ரூ. 1 லட்சம் அபேஸ் செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Last Updated : Sep 1, 2021, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.