ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்...

11 மணி செய்தி சுருக்கம்  top ten news  latest news  tamilnadu latest news  top ten news at 11 am  ஈடிவி பாரத்  ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம்  செய்தி சுருக்கம்
11 மணி செய்தி சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Jun 20, 2021, 11:08 AM IST

சபாநாயகராக 2 ஆண்டுகள் நிறைவு.. ஓம் பிர்லாவை பாராட்டிய மோடி..

ஓம் பிர்லா சபாநாயகராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நேற்று பிரதமர் மோடி அவருக்கு விருதுகள் வழங்கினார். 2019 ஜூன் 19ஆம் தேதி ஓம் பிர்லா 17ஆவது மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜல் ஜீவன் திட்டம்: அசாமிற்கு 5601.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்துக்கு 5601.16 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்லிக்கு மாம்பழங்கள் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ’கிசான் ரயில்’

விவசாயிகளுக்கான போக்குவரத்துச் செலவில் 50 விழுக்காடு மானியம் வழங்கும் சிறப்பு ரயிலான ‘கிசான் ரயில்’, கோலார் பிராந்தியத்தில் பயிரிடப்பட்ட 250 டன் மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு, டோடனாட்டா ஹால்ட் ஸ்டேஷனில் (சிந்தமணி) இருந்து நேற்று (ஜூன்.19) டெல்லி புறப்பட்டது.

கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 13 பேர் படுகாயம்

மங்கோல்பூரி பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குப்பைக் கிடங்கில் திடீர் தீ விபத்து

அதிராம்பட்டினம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பேரூராட்சி வாகனம் தீயில் கருகியது.

நாடோடிய நடிகை பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை காவல் துறையினர் அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

'வீட்டிலிருந்தே வருமானம்' - விளம்பரத்தை நம்பி வில்லங்கத்தில் சிக்கிய நபர்

போலி விளம்பரத்தை நம்பி தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து அந்நிறுவனம் லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றியுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள துபாய்

துபாயில் சில நாடுகளுக்கான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் மர்ம தீவு... ஆச்சரியத்தில் நிபுணர்கள்!

கூகுள் மேப்பில் கடலுக்கு அடியில் பீன் வடிவிலான மர்மத் தீவு தெரிவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன்முறையாக மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள மகத்!

நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவருமான மகத், முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.