ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm - முக்கியச் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்...

செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 18, 2021, 1:05 PM IST

1. கரோனா தடுப்பூசி - திருநெல்வேலி 2ஆம் இடம்

கரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் செலுத்தியதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் 2ஆம் இடம் பெற்றுள்ளது.

2. ஒகேனக்கலில் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கலில் நீர்வீழ்ச்சியில் 10 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

3. ‘அதிமுக அழிவை நோக்கி செல்கிறது’- ஜான்பாண்டியன்

இரண்டு தலைமையால் அதிமுக அழிவை நோக்கி செல்வதாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

4. தோல் நோயால் பாதிக்கப்பட்ட டீ மாஸ்டர் தற்கொலை

கரூரில் தோல் நோயால் பாதிக்கப்பட்ட டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5. பிரஷர் குக்கரை எட்டி உதைத்த ரயில்வே இன்ஸ்பெக்டர் - குழந்தை காயம்

லக்னோவில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற இடத்தில் ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரஷர் குக்கரை எட்டி உதைத்தால் குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது.

6. தொழிலாளர்களிடம் லஞ்சம் - ஐ.ஆர்.எஸ் அலுவலர் கைது

கோட்டாவில் ஓபியம் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் லஞ்சம் வாங்கிய ஐஆர்எஸ் அலுவலரை ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பணியகம் கைது செய்துள்ளது.

7. தொடர் கொள்ளை - கொள்ளையன் கைது

உத்தரமேரூரில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 9 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

8. மெரினா கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

மெரினா கடற்கரையில் பிறந்து சில நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

9. மாமியாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மருமகன் கைது

நாங்குநேரி அருகே மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

10. விஷசாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த விவகாரம் - 16 பேர் கைது

பீகாரில் விஷசாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 16 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.