ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - latest tamil news

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11 மணி செய்தி
11 மணி செய்தி
author img

By

Published : Oct 16, 2020, 10:54 AM IST

1. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

2. நாளை முதல் சபரிமலை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: இன்று (அக். 16) மாலை முதல் சபரிமலை திறக்கவுள்ள நிலையில், நாளை (அக். 17) பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

3. 'வாருங்கள் உடன்பிறப்புகளே, நம் பணிகளை இன்றே தொடங்குவோம்' - இபிஎஸ், ஓபிஎஸ் மடல்!

சென்னை: அதிமுகவின் 49ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களுக்கு மடல் வெளியிட்டுள்ளனர்.

4. நகோர்னா - காராபாக் போர் நிறுத்தம் : உறுதி அளித்த துருக்கி, ரஷ்யா

நகோர்னா-காராபாக் பிராந்தியத்தில் போர் நிறுத்த விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாக துருக்கி, ரஷ்யா நாடுகள் உறுதி அளித்துள்ளன.

5.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல்!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் மறைவையொட்டி அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

6.ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யப்பட்ட உடல் - தொடரும் அவலம்!

கள்ளக்குறிச்சி: மட்டிகைக்குறிச்சியில் விவசாயி ஒருவரின் உடலை அடக்கம் செய்ய, அப்பகுதி மக்கள் இடுப்பளவு தண்ணீரிலும் ஆற்றைக் கடந்து எடுத்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

7. கிசான் திட்ட மோசடியில் 101 பேர் கைது; ரூ.105 கோடி பறிமுதல்!

சென்னை: விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் இதுவரை மாநிலம் முழுவதும் 101 பேர் கைது செய்யப்பட்டு, 105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

8. தொடங்கியது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்!

அமேசான் நிறுவம் தனது கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை இன்று (அக்.16) முதல் தொடங்கி உள்ளது. அதேபோல பிளிப்கார்ட் நிறுவனமும் தனது பிக் பில்லியன் டே-வை தொடங்கியுள்ளது.

9. ஆஸ்கர் விருது வென்ற பானு அத்தையா காலமானார்!

மும்பை: சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா (91) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (அக்.15) காலமானார்.

10. இனத்துரோகி வேடத்தில் இனப்பற்றாளரா? - ’800’க்கு வலுக்கும் எதிர்ப்பு!
சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரின் பாத்திரம் ஏற்று நடிக்கும் விஜய் சேதுபதி உடனடியாக அப்படத்தில் இருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.