1. 72ஆவது மன் கி பாத்: மோடி இன்று உரையாற்றுகிறார்
டெல்லி: 72ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.27) உரையாற்றுகிறார். இது இந்த ஆண்டிற்கான அவரது கடைசி உரை.
2. பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் மிரட்டும் ஆஸ்திரேலியா; தடுமாற்றத்தில் இந்தியா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
3. சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை டிச.31ஆம் வெளியீடு!
டெல்லி: சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேர்வு அட்டவணை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
4. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 4.1ஆக பதிவு
போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவில் திக்லிபூருக்கு வடக்கே நேற்று (டிசம்பர்-26) நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.
5.புதிய வகை கரோனா குறித்து டிச., 28ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை
சென்னை: புதிய வகை கரோனா தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவினருடன் டிசம்பர் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
6. கூழாங்கல் கலையின் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம் - மகாராஷ்டிரா இளைஞரின் புதிய முயற்சி
கரோனா ஊரடங்கு மெத்த படித்தவர்களின் வேலைகளை பறித்து அவர்களை இன்னலுக்குள்ளாக்கியது. வணிக செயல்பாடுகள் குறைந்து உழைக்கும் வர்க்கம் தங்களின் வேலைகளை இழக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. ஆனால், மெத்த படித்த வேலை இல்லாத இளைஞர் ஒருவர் அதனை தனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். அது தொடர்பான செய்தி தொகுப்பு...
7. வாக்குக்கு 'மது, பணம், இலவசம்' இல்லாத தேர்தல் நடத்த முடிவு - தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குக்கு மது, பணம், இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்படாத வண்ணம் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. மேலும், கரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்றவும் வழிமுறைகள் வகுப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
8. கரோனா ஊரடங்குக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று திறப்பு - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கோயம்புத்தூர்: கரோனா ஊரடங்குக்கு பிறகு கோவை குற்றாலம் இன்று (டிசம்பர் 27) திறக்க இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தயார் - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக, முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
10. லண்டனில் இருந்து தேனி வந்த மென்பொருள் பொறியாளருக்கு கரோனா...!
தேனி: லண்டனில் இருந்து தேனி வந்த மென்பொருள் பொறியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.