ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @  9 PM
Top 10 News @ 9 PM
author img

By

Published : Feb 13, 2021, 9:02 PM IST

”ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார்” - மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார் என உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'மாநில அரசு, மத்திய அரசின் கொத்தடிமை அரசாக உள்ளது' - வைகோ குற்றச்சாட்டு

மதுரை: முதலமைச்சர் பழனிசாமி ஒன்பது ஆண்டுகளாக தூங்கி விட்டு தற்போது அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிராக மக்களவையில் பேசிய வடசென்னை எம்பி!

பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பேசிய வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டதை ரத்துசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசியுள்ளார்.

ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி போராட்டம்!

கடலூர் : சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் நோயாளி ஒருவர், டயாலிசிஸ் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: இதுவரை அரசின் நடவடிக்கை என்ன?

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஷ்மீர் மக்களுக்கு குரல் கொடுத்த தமிழச்சி தங்கப்பாண்டியன்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த மத்திய அரசு, கூட்டாட்சித் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் குழித்தோண்டி புதைத்து விட்டதாக, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார்.

"நீட் தேர்வை ரத்து செய்வதாக மோடி அறிவித்தால் அவரை வரவேற்கத் தயார்"- ஆ.ராசா

கோவை: நீட் தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அறிவித்தால் அவரை வரவேற்க தயார் என திமுக துணைப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் மீது பகை - நாடகம் அரங்கேற்றிச் சிக்கிய 19 வயது இளம்பெண்!

இளம்பெண் காணாமல் போன விவகாரம் தொடர்பாகக் காவல் துறையினர் நடத்திய துரித விசாரணையில், பெண் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர் மீதிருந்த முன்பகை காரணமாகப் அப்பெண் இச்செயலில் ஈடுபட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் கடத்தப்பட்டதாக மனைவி புகார் - திமுக பிரமுகர் உள்பட நால்வர் கைது!

கணவர் கடத்தப்பட்டுள்ளதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வந்த காவல் துறையினர், கடத்தலில் தொடர்புடைய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்பட நான்கு பேரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

வனப்பகுதிகளை சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரி வழக்கு!

மதுரை: வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சோதனைச் சாவடி, அதிகாரி அலுவலகம், குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.