ETV Bharat / state

இரவு 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 9pm - சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்...

top-10-news-at-9pm
top-10-news-at-9pm
author img

By

Published : Feb 9, 2021, 9:07 PM IST

  • பிப்.14 இல் பிரதமர் மோடி தமிழகம் வருகை

தமிழ்நாட்டிற்கு வரும் 14 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகைத் தரவுள்ளார். அன்றைய தினம், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம், வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையேயான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை நேரு உள்நாட்டு விளையாட்டு அரங்கில், இந்நிகழ்வு நடைபெறுவதாக உறுதியாகியுள்ளது.

  • சட்டப்பேரவை தேர்தல் களம்! மண்டலங்களின் நிலை என்ன?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், தமிழகத்தின் மண்டலங்கள் எந்த கட்சிக்கு சாதகமாக உள்ளன, கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு இம்முறையும் தொடருமா அல்லது களம் மாறியிருக்கிறதா என்பது குறித்த விரிவான ஓர் அலசல்.

  • கிருபானந்த வாரியார் பிறந்தநாள்- அரசு விழாவாகக் கொண்டாடப்படும்!

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  • தஞ்சாவூரில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான நிலம் பறிமுதல்!

சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன், இளவரசிக்குச் சொந்தமான சொத்துக்களை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்துள்ளது.

  • சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு: அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவு!

சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தாம்பரம் தாசில்தாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பெங்களூரு விமான நிலையம்!

ஏஐசி( Airports Council International) சார்பில் பெங்களூரு விமான நிலையத்திற்கு வாய்ஸ் ஆஃப் தி கஸ்டமர் (Voice of the Customer) விருது வழங்கப்பட்டுள்ளது.

  • சர்வதேச கடத்தல் மன்னன் பெங்களூருவில் கைது!

சர்வதேச அளவில் போதை பொருள்களைக் கடத்தி வந்த நபரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

  • உத்தரகண்ட் வெள்ளம்: 3ஆவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

உத்தரகண்ட் வெள்ளம் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போதுவரை மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 7 நாள்கள் போலீஸ் காவலில் தீப் சித்து!

செங்கோட்டை வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவை, 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

  • ஆஸ்திரேலியன் ஓபன்: கோவினிக்கை வீழ்த்தி ஆஷ்லே வெற்றி!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்ட்டி 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மாண்டினீக்ரோ டங்கா கோவினிக்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.