ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9am - 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்....

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
author img

By

Published : Jan 17, 2021, 9:27 AM IST

1. ஜனவரி இறுதிக்குள் இடதுசாரிகளுடன் தொகுதி பங்கீடு; மேற்கு வங்க காங்கிரஸ் தீவிரம்

மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டிவருகிறது.

2. ஜோ பைடன் பதவியேற்பு விழா; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடாமல் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

3. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நண்பரின் காளையை அவிழ்த்துவிடச் சென்ற நபரை மாடு முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

4. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 1000 பறவைகள் உயிரிழப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5. ராஜஸ்தானில் மின்கம்பத்தில் பேருந்து மோதி விபத்து... 8 பேர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

6. குடியரசு தின விழா: டெல்லி காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

டெல்லி: குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா ஆய்வு மேற்கொண்டார்.

7. தன்பாலின திருமணம் செய்துகொண்ட பெண்கள்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

ஓடிஸா: தன்பாலின திருமணம் செய்து கொண்ட பெண்கள் இருவர், பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

8. Pak vs SA: கராச்சி சென்றடைந்தது டி காக் & கோ!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று (ஜனவரி 17) கராச்சி சென்றடைந்தது.

9. கரோனாவிலிருந்து மீண்டார் மொயின் அலி!

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் அல்ரவுண்டர் மொயின் அலி தொற்றிலிருந்து மீண்டு தற்போது அணியுடன் இணைந்துள்ளார்.

10. ஆர்க்டிக் ரேலி: அடர் பனிக்கு நடுவே ஆர்பரித்தோடும் கார்கள்!

2021ஆம் ஆண்டிற்கான ஆர்க்டிக் லாப்லாண்ட் ரேலி கார் பந்தயம் நேற்று (ஜன.17) பின்லாந்தில் தொடங்கியது. இதன் முதல் நாளில் ஃபார்முலா ஒன் கார்பந்தய நட்சத்திர வீரர் வால்டேரி போடாஸ் எட்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.