ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்தி
9 மணி செய்தி
author img

By

Published : Oct 16, 2020, 8:43 AM IST

Updated : Oct 16, 2020, 10:26 AM IST

1. ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்.16) முதல் ஆம்னி பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

2. நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

டெல்லி: நாடு முழுவதும் தேசிய மருத்துவத் தகுதி தேர்வான 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று(அக்.16) வெளியாகின்றன.

3. சீனாவுடன் என்ன பேசினோம் என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியாது - ஜெய்சங்கர்

டெல்லி: இந்திய-சீன நாடுகளுக்கிடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

4. வடகிழக்கு பருவமழை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை மற்றும் புயலில் இருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

5. இந்த மெட்ரோ ரயில்ல பயணம் செய்ய முடியாது... ஆனால் படிக்கலாம்!

அச்சு அசலாக மெட்ரோ ரயில் போலவே இருக்கும் எண்ணூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் பிரபலமடைந்து வருகிறது. எண்ணூரைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள் இதனைச் சுற்றுலாத்தலம் போல வந்து கண்டு நெகிழ்கின்றனர்.

6. கிராமசபை மீட்பு வாரத்தின் ஆறாம் நாள்!

சென்னை: கிராம சபை மீட்பு வாரத்தின் ஆறாம் நாளான இன்று(அக்.16), #ConductGramsabhaNow #உடனே கிராமசபை நடத்துக எனும் வாசங்களுடன் வீட்டின் முன் கோலங்களை வரைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

7. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல்!

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் மறைவையொட்டி அவருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

8. பாலியல் குற்றவாளிக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சாகும் வரை ஆயுள் விதிப்பு

நெல்லையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சாகும் வரை ஆயுள் தண்டணையும், 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

9. ஐபிஎல் 2020: ராகுல் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்

பஞ்சாப் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

10.ஓடிடி தளத்தில் வெளியான 'புத்தம் புது காலை' திரைப்படம்!

சென்னை: ஐந்து முன்னணி இயக்குநர்கள் இயக்கியுள்ள, 'புத்தம் புது காலை' திரைப்படம் இன்று (அக்.16) ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Last Updated : Oct 16, 2020, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.