ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9AM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 30, 2020, 8:55 AM IST

top-10-news-at-9am
top-10-news-at-9am

விசாகப்பட்டினம், சைனர் பார்மா விஷவாயு கசிவில் இருவர் உயிர் இழப்பு!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் பரவடா, ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியிலுள்ள சைனர் பார்மா நிறுவனத்தில் விஷ வாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதவி நீட்டிப்பு

டெல்லி: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்றுடன் (ஜூன்30) முடிவடையும் நிலையில், அவருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 எதிரொலி: கல்வியில் புதிய கருவிகளின் தேவை குறித்து நிதிக்குழு ஆலோசனை!

டெல்லி: கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் கல்வியில், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்து 15ஆவது நிதிக்குழு ஆலோசனை நடத்தியது.

இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை!

டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்து... விரைவில் பரிசோதனை!

ஹைதராபாத்: பாரத் பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பூசி மருந்தை, மருத்துவப் பரிசோதனைக்குப் பயன்படுத்துவதற்கான அனுமதியை டிசிஜிஐ (Drug Controller General of India)-யிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை - ஏன்?

டெல்லி: டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

'பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்கு பயின்ற பள்ளியிலேயே சேர்க்கைப் படிவத்தை வழங்க வேண்டும்'

சென்னை: பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேருவதற்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பயின்ற பள்ளியிலேயே சேர்க்கைப் படிவத்தை வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது.

நளினியின் தாயார் தொடர்ந்த ஆள்கொணர்வு மனு தள்ளுபடி; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும் நளினியும் 30 நிமிடங்கள் காணொலி அழைப்பு வாயிலாகப் பேசியதையடுத்து, நளினியின் தாயார் தொடர்ந்த ஆள்கொணர்வு மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியாகும் 'லக்ஷ்மி பாம்'

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடித்துள்ள 'லக்ஷ்மி பாம்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

எஃப்ஏ கோப்பை: அரையிறுதிப் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் கால்பந்து தொடரான எஃப்ஏ கோப்பைத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான அட்டவணையை எஃப்ஏ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.