ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top Ten 10 @ 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 31, 2021, 9:19 PM IST

1 பாராலிம்பிக்கில் வெள்ளி வென்று கெத்துகாட்டிய தமிழன் மாரியப்பன்!

இந்தியரும் தமிழருமான மாரியப்பன் பாராலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் பங்கெடுத்தார். இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற இறுதிப்போட்டியில், அவர் 1.86 மீட்டர் உயரம் தாண்டி, உலகளவில் இரண்டாவது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

2 பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

3 'எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - ஜெயக்குமார் சவால்

விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கண்ணை உறுத்துகிறது எனவும், அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

4 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணையும் ஜெயலலிதா பல்கலைக்கழகம்

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்துடன் இணைப்பதற்கான சட்டமசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

5 அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

பொறியியல் மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படும் எனவும்; போதுமான இடவசதி இல்லாத கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

6 கல்வியைத் தாயாக கருதியவர் ஜெயலலிதா - ஓபிஎஸ்

கல்வியைத் தாயாக கருதிய ஜெயலலிதாவின் பெயரை நீக்குவது, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் எனவும்; ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கு நிதி, இடம் ஒதுக்கவேண்டியது தற்போதைய அரசின் வேலை எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

7 ஊரக உள்ளாட்சித்தேர்தல்: மறுசீரமைப்பு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

8 மேகேதாட்டு அணை கட்ட ஒன்றிய அரசு மறைமுகமாக துணை போகிறது - பி.ஆர்.பாண்டியன்

கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் அணை கட்டுவவதற்கு ஒன்றிய அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

9 கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

10 ஆர்டிஐ ஆர்வலர்களைப் பாதுகாக்கக்கோரிய மனு - டிஜிபி தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் பெறும் ஆர்வலர்களைப் பாதுகாக்க, தனி அமைப்பை உருவாக்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் மனுவை விரைந்து பரிசீலித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.