ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top Ten 10 @ 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 30, 2021, 9:27 PM IST

1. தமிழ்நாட்டில் செப். 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2. ஆண்டுகள் கடந்து பள்ளி வாசம் காணும் மாணவர்கள் - செப்.1 பள்ளிகள் திறப்பு உறுதி

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின்படி, நாளை மறுநாள் (செப் 1) பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலில் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கல்லூரிகளும் அன்றைய தேதியில் இருந்து திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கி வீடியோ எடுத்த தாய்க்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

4. மாணவர் சங்க இயக்குனர் மீது பாலியல் புகார்- விசாரணை கோரிய மனு தள்ளுபடி

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனருக்கு எதிரான பாலியல் தொல்லை புகார் மீது விசாரணை நடத்தக் கோரி பெண் ஊழியர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5. வேளாண் சட்டத்திற்கு எதிரான தீா்மானம்: அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமா?

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீா்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

6. செப்டம்பர் 1 முதல் மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம்

சென்னை: கரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பேருந்துகளில் மாணவர்கள் சீருடையுடன், கட்டணமின்றி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

7. ராமேஸ்வரம் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆயிரக்கணக்கான வெளிமாநில பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து ஆடிப்பாடி கொண்டாடிவருகின்றனர்.

8. திருச்சபை தேர்தலில் குளறுபடி - எதிர்தரப்பினர் சாலை மறியலால் பரபரப்பு

நாசரேத் மண்டல திருச்சபை தேர்தலில் விதிகளை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் எதிர்தரப்பினர் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்ற இடத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

9. திருவொற்றியூரில் இருந்து கோயம்புத்தூர், ராமேஸ்வரத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கம்

சென்னை திருவொற்றியூரிலிருந்து கோயம்புத்தூர், ராமேஸ்வரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு பேருந்து சேவையை வட சென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

10. வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு - இருவர் கைது

திருச்சி காகித ஆலையில் பணிசெய்த ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் வடமாநிலத்தவர் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.