1 பொறியியல் விண்ணப்பங்கள்: இதுவரை 1,54,389 மாணவர்கள் பதிவு
பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, 1 லட்சத்து 54 ஆயிரத்து 389 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
2 தமிழ்நாட்டில் இன்று 1,804 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஆயிரத்து 804 நபர்களுக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
3 36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி முடியும்- உயர் நீதிமன்றம் எதிர்பார்ப்பு
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை, ஒன்றிய அரசு இன்னும் 36 மாதங்களில் முழுமையாக முடித்து தரும் என எதிர்பார்க்கிறோம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
4 மாரியப்பன் மீண்டும் தங்கம் வெல்வார் - தாயார் சரோஜா நம்பிக்கை
பாரா ஒலிம்பிக்கில் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று பிரதமர் மோடி உடனான கலந்துரையாடலுக்குப்பின், அவரின் தாயார் சரோஜா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
5 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு 25% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம் - அமைச்சர் பொன்முடி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை 25 விழுக்காடு அதிகரித்துக்கொள்ளலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
6 பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து, முதலமைச்சர் உடனான ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
7 வருமானவரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம்' - நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நடிகர் சூர்யா தரப்பு தெரிவித்துள்ளது.
8 கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு - முதல் குற்றவாளி சயானிடம் விசாரணை
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
9 6 மாதங்களுக்குப் பின் சிறைக்கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி - இது மதுரை சம்பவம்
மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகள் தங்களது உறவினர்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
10 4.5 லட்சம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தமிழ்நாட்டில் 4.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 23 விழுக்காடு அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.