1 தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
2 சென்னையில் தெரு விளக்கு பராமரிப்பிற்கான டெண்டர் ரத்து
சென்னையில் தெரு விளக்கு பராமரிப்புக்காக 27 கோடி ரூபாய்க்கு விடப்பட்ட டெண்டரை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
3 பி.இ, பி.டெக் படிப்பு - 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு
பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 992 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
4 தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர்..!
நடிகை தமன்னாவும், ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கும் இணைந்து நெட்பிளிக்ஸ் உருவாக்கும் படத்தில் நடிக்கின்றனர்.
5 திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' எடுக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் கடும்தாக்கு
திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' படம் எடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரை அவமதிக்கும் செயலை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
6 தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை..!
தனியார் பள்ளிகளில் சேர, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின் கீழ், 82 ஆயிரத்து 766 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
7 பாசமாக வளர்த்துவந்த கிளியைக் காணவில்லை: சோகத்தில் குடும்பத்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் பாசமாக வளர்த்துவந்த கிளி நான்கு நாள்களாக காணாமல் போனதால், ஒரு குடும்பத்தினர் வீடுவீடாகச் சென்று நோட்டீஸ் கொடுத்து கிளியைத் தேடி வருகின்றனர். கிளியைக் கண்டுபிடித்து ஒப்படைத்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். தாங்கள் பாசமாக வளர்த்த கிளியை நோட்டீஸ் அடித்து தேடிவரும் மனிதநேயமிக்க குடும்பத்தினரின் செயல் ராமநாதபுரம் மக்களை மனம் நெகிழச் செய்துள்ளது.
8 வலிமை ரிலீஸ் எப்போது?
அஜித்தின் 'வலிமை' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக்கூறி, 'தல' தீபாவளி எனும் ஹேஷ்டேக்கை உருவாக்கி, அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
9 பணி நிரந்தரம் செய்க: எம்ஆர்பி செவிலியர் ஆர்ப்பாட்டம்
எம்ஆர்பி தேர்வு மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 விமானத்தில் தொங்கியபடி சென்ற மூவர்; நடுவானில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு!
ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்பிக்க முயன்ற மூவர் நடுவானில் இருந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.