ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - latest news

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 25, 2021, 9:02 PM IST

'அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பு' - எம்எல்ஏ சேகர்பாபு புகார்

துறைமுகம், ஆர்.கே. நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவினர் டோக்கன் விநியோகித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என திமுக எம்எல்ஏ சேகர்பாபு மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

விஜயகாந்த் இன்று இரண்டாவது நாளாக பரப்புரை!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று அக்கட்சியின் எழும்பூர், திரு.வி.க நகர் தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டார்.

கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா!

தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கடந்த 12 நாள்களில் கரோனா 135% உயர்ந்துள்ளது எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மயூரா ஜெயக்குமாரை தகுதியான வேட்பாளராக அறிவித்த உத்தரவுக்குத் தடை கோரி வழக்கு

காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரைத் தகுதியான வேட்பாளராக அறிவித்த தேர்தல் ஆணைய உத்தரவிற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

'பாஜக அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது' - வைகோ கண்டனம்

வருமான வரித்துறையை ஏவி, அதிகார அத்துமீறலில் பாஜக ஈடுபடுகிறது என வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாசன் வெளியூர்க்காரரா?

கமல் ஹாசன் வெளியூர்க்காரர் என்று பரப்புரை செய்வதை வேடிக்கையாகவே பார்ப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தடைகளைத் தாண்டி சாதனைப் படைத்த இமாச்சலப் பிரதேச பெண்!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளம்பெண் ஒருவர், இமாச்சலப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் சாதனை படைத்துள்ளார்.

தீப்பிடித்து எரிந்த ராணுவப் பயிற்சி வாகனம்: 3 வீரர்கள் உடல் கருகி உயிரிழப்பு!

ராஜஸ்தானில் ராணுவப் பயிற்சி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், மூன்று வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

முதியவர் கத்தியால் குத்திக் கொலை: அடையாளம் தெரியாத கும்பலுக்கு வலைவீச்சு

இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை கத்தியால் குத்திக் கொன்ற அடையாளம் தெரியாத கும்பல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.